தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றிருக்கும் கலைப்புலி எஸ்.தாணு, தான் தயாரிக்கும் படங்களை பிரம்மாண்டமாக தயாரிப்பதோடு, தனது ஒவ்வொரு படத்தின் விளம்பரத்தையும் பிரம்மாண்டமாக செய்து வருகிறார்.
முன்னணி ஹீரோக்கள், வளரும் ஹீரோக்கள், எதார்த்தமான கதைக்களம் கொண்ட படங்கள், என்று அனைத்து விதமான திரைப்படங்களையும் தயாரித்து வரும் தாணு, திரையுலகினருக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடம் கட்டுவதற்காக ரூ.50 லட்சத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதற்கான வரைஓலையை (டிடி) தென்னிந்திய வர்த்தக சபையின் கன்வீனர் எஸ்.கல்யாண், தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரக்கரா ஆகியோரிடம் தயாரிப்பாளர் எஸ்.தாணு இன்று வழங்கினார்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...