கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘உறியடி’ என்ற படம் தமிழ் சினிமாவின் முழு கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தின் மூலம் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமான விஜயகுமார், தற்போது தனது இரண்டாவது படத்திற்கு தயாராகிவிட்டார்.
’உறியடி’ போல, சமூகத்திற்கு தேவையான ஒரு மேசஜ் சொல்லும் படமாகவும், அதே சமயம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் தனது இரண்டாம் பத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் விஜய்குமார், இப்படத்தை சூர்யாவுக்காக இயக்குகிறார்.
ஆம், நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது. ’36 வயதினிலே’, ‘பசங்க 2’, ‘மகளிர் மட்டும்’, ‘24’ மற்றும் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் 2டி நிறுவனம் விஜயகுமாரின் இரண்டாவது படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் இணை தயாரிப்பாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனுடன், தனது சோவ்னீர் புரொடக்ஷன்ஸ் சார்பில் மற்றொரு இணை தயாரிப்பாளராகவும் இயக்குநர் விஜயகுமார் இணைகிறார்.
இப்படத்தை இயக்குவதோடு இதில் ஹிரோவாகவும் விஜயகுமார் நடிக்க, நாயகியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா என்பவர் நடிக்கிறார். இவர்களுடன் ‘மெட்ராஸ் செண்ட்ரல்’ சுதாகர் முக்கிய வேடத்தில் நடிக்க, ‘உறியடி’ படத்தில் நடித்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விஜய் சேதுபதியின் ‘96’ படத்திற்கு இசையமைத்துள்ள கோவிந்த் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்ய, லினு படத்தொகுப்பு செய்கிறார். ஏழுமலை ஆதிகேசவன் கலையை நிர்மாணிக்க, விக்கி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
குற்றாலம், தென்காசி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...