தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக தமிழ் சினிமாவில் எண்ட்ரியான ஆர்.கே.சுரேஷ், பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘மருது’, ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இப்படை வெல்லும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், ’பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகும் ஆர்.கே.சுரேஷ், தான் இயக்கும் முதல் படத்தில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபுவை ஹீரோவாக நடிக்க வைக்க இருக்கிறாராம். ‘மெட்ராஸில் ஒரு மெஸ்ஸி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறாராம்.
முன்னதாக ‘கூர்கா’ என்ற படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும், அதில் இடம்பெற்றிருந்த யோகி பாபு ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்த யோகி பாபு, அப்படத்தில் நாய் ஒன்றும், வெள்ளைக்காரர் ஒருவரும் தான் ஹீரோக்கள், தான் எப்போதும் போல காமெடி வேடத்தில் தான் நடிக்கிறேன், என்று கூறியிருந்தார்.
அதேபோல், பல அவரை ஹீரோவாக நடிக்க வற்புறுத்தி வந்த போதிலும், தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த யோகி பாபுவை, ஆர்.கே.சுரேஷ் எப்படியோ மடக்கி தனது படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...