காமெடி நடிகர் மனோபாலா தான் தயாரித்த ‘சதுரங்க வேட்டை’ வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தை தொடர்ந்து பாபி சிம்ஹாவை ஹீரோவா வைத்து ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை தயாரித்தார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையே, அரவிந்த்சாமியை வைத்து ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை மனோ பாலா தயாரித்தார். ஆனால் நிதி நெருக்கடியால் இப்படத்தை முடிக்க அவர் ரொம்ப சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ’சதுரங்க வேட்டை 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவதும் முடிவடைந்த நிலையில், ஹீரோ அரவிந்த்சாமிக்கு சம்பளம் முழுமையாக செட்டில் செய்யவில்லையாம். இதையடுத்து, தனது சம்பளபாக்கியான ரூ.1.79 கோடியை வட்டியுடன் கொடுக்க வேண்டும், என்று அரவிந்த்சாமி மனோ பாலா மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்யும்படி மனோ பாலாவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்த மனோ பாலா, அரவிந்த்சாமியுடன் சமரசமாக செல்ல இருப்பதாகவும், முதல் தவனையாக ரூ.25 லட்சம் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
மனோ பாலாவின் மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், அரவிந்த்சாமி, மனோ பாலா இரு தரப்பினரையும் அக்டோபர் 12 ஆம் தேதி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்றத்தில் அறிவிக்காமல் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை வெளியிட மாட்டேன், என்றும் மனோ பாலா உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...