Latest News :

கார்த்தி படத்தால் ஏற்பட்ட பெரும் நஷ்ட்டம்! - வருத்தத்தில் தயாரிப்பாளர்
Tuesday September-25 2018

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்த கார்த்தி, வசூல் ரீதியாகவும் பல சாதனைகளைப் புரிந்தார். அப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமான ‘தேவ்’ பட படப்பிடிப்பில் பிஸியாக ஈடுபட்டிருக்கிறார்.

 

இதற்கிடையே, கார்த்தியின் படத்தால் தயாரிப்பாளர் ஒருவர் பெரும் நஷ்ட்டத்தை சந்தித்திருப்பது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தயாரிப்பாளர் லக்‌ஷ்மன் கார்த்தியை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் ‘தேவ்’ படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக 140 பேர் கொண்ட படக்குழுவினர் குலு மணாலியில் முகாமிட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், குலு மணாலியில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு பெரும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதால், ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். படப்பிடிப்பு நின்று போனதால் தயாரிப்பாளர் லக்‌ஷ்மனுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது.

 

இது குறித்து கூறிய நடிகர் கார்த்தி, “தேவ் படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார், பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்க்கும் போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது. இதனால் படப்பிடிப்புக்கு காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டது. இதனால் ரோட்டில் சென்ற கார்களும் நகரவே இல்லை.  4-5 மணி நேரம் நான் காரியிலேயே இருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேரை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் எங்கே தங்குவர்கள், சாப்பிடுவார்கள் எப்படி கீழே இறங்குவார்கள் என்று வருத்தமாக உள்ளது.

 

Kulu Manali

 

23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும். அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது.” என்றார்.

 

படக்குழுவினர் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியிருப்பது ஒரு பக்க வருத்தமளிக்க, தயாரிப்பாளருக்கு ரூ.1.50 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதும் பெரும் வருத்தமளிக்க கூடியதாக இருக்கிறது.

Related News

3494

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery