பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான நடிகை சுஜா வருணியும், நடிகர் சிவாஜி தேவும் காதலித்து வந்தார்கள். சமீபத்தில் இவர்கள் ஒன்றாக கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
மேலும், நடிகை சுஜா வருணிக்கும், சிவாஜி தேவுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் சுஜா வருணிக்கு அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சுஜா வருணி, தனக்கும் சிவகுமார் என்பவருக்கும் வரும் நவம்பர் 19 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், சிவகுமாரை திருமணம் செய்துகொள்ள தான் அதிர்ஷ்டம் செய்தவள், என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சிவாஜி தேவ் என்ற பெயரில் ‘சிங்கக்குட்டி’, ‘புதுமுகங்கள் தேவை’, ‘இதுவும் கடந்து போகும்’ ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது தனது பெயரை சிவகுமார் என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...