ஆசிய சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை பெற்றவர் பி.ஆர்.விஜயலட்சுமி. பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவின் மகளான இவர் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பாட்டு பாடவா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானர். பிறகு பல்வேறு தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வந்தவர் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘அபியும் அனுவும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக மலையாளத்தில் வளர்ந்து வரும் டோவினோ தாமஸ் நடிக்கிறார். ஹீரோயினாக பிஜா பாஜ்பார் நடிக்கிறார். இவர்களுடன் சுஹாசினி, பிரபு, ரோஹினி, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
காதலை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான அதே சமயம் துணிச்சலான ஒரு படமாக ‘அபியும் அனுவும்’ இருக்கும் என்று இயக்குநர் பி.ஆர்.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திரைப்பட் தயாரிப்பு நிறுவனமான யோட்லி பிலிம்ஸ் (Yodlee films_) தயாரிக்கும் இப்படத்திற்கு தரன் இசையமைக்க, அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார். உதயபானு மகேஷ்வரன் கதை, திரைக்கதை எழுத, சுனில் ஸ்ரீ நாயர் படத்தொகுப்பு செய்கிறார்/ மதன் கார்கி பாடல்கள் எழுத பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...