Latest News :

‘பாகுபலி’ வில்லனுடன் மோதிய பிரபு தேவா!
Tuesday October-02 2018

பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘எங் மங் சங்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ‘பாகுபலி’ வில்லன் பிரபாகருடன் பிரபு தேவா மோதும் சண்டைக்காட்சி ஒன்றை மிக பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.

 

இதில், பிரபு தேவா குங்பூ மாஸ்டராக நடிக்க, சண்டைகளை கற்று கொடுக்குக் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவராக ’பாகுபலி’ வில்லன் பிரபாகர் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை, சென்னை அருகே உள்ள பொழிச்சலூர் காட்டுப் பகுதியில் கடந்த 7 நாட்களாக படமாக்கியுள்ளனர்.

 

இந்த சண்டைக்காட்சியில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க, மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

 

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில், தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்க, பிரபுதேவா மற்றும் மு.ரவிகுமார் பாடல்கள் எழுதியுள்ளனர். ஸ்ரீதர், நோபல் ஆகியோர் நடனம் அமைக்க, சில்வ சண்டைக்காட்சிகலை வடிவமைத்திருக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி அர்ஜுன் எம்.எஸ் இயக்குகிறார்.

 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக ‘எங் மங் சங்’ இருக்கும், என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்தார்.


Related News

3523

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery