’நடிகையர் திலகம்’ படத்திற்குப் பிறகு தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக் உருவெடுத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஷாலுடன் சேர்ந்து நடித்த ‘சண்டக்கோழி 2’ மற்றும் விஜயுடன் சேர்ந்து நடித்திருக்கும் ‘சர்கார்’ என இரண்டு படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மேலும் பல படங்களில் கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் பிரியதர்ஷனின் கனவுப்படமான ‘மரக்கார் - அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் மரக்கார் வேடத்தில் நடிக்கும் மோகன்லாலுக்கு அவர் ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், கீர்த்தி சுரேஷ் மோகன்லாலுக்கு ஜோடி இல்லை என்றும், அப்படத்தில் நடிக்கும் சீன நடிகர் ஒருவருக்கு அவர் ஜோடியாக நடிக்கிறார், என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
19-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் இப்படத்தில் மரக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்க, மோகன்லாலின் இளம் வயது வேடத்தில் அவரது மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார்.
‘சிறைச்சாலை’ படத்துக்குப் பிறகு 22 வருடங்கள் கழித்து மோகன்லால் பிரபு இருவரும் இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடிக்கின்றனர்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...