Latest News :

இரவு நேரத்தில் மஹத் செய்த செயல்! - பிக் பாஸ் ரகசியத்தை சொல்லும் மும்தாஜ்
Wednesday October-03 2018

மக்களின் பேவரைட் டிவி நிகழ்ச்சிகளில் முதன்மையானதாக விளங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் முடிந்துவிட்டது. இதில் ரித்விகா வெற்றி பெற்றிருந்தாலும், போட்டியாளர்களில் ஒருவரான நடிகை மும்தாஜும் ரசிகர்களுக்கு பிடித்தமான போட்டியாளராகவே இருந்தார்.

 

தான் உண்டு, தனது வேலை உண்டு, என்று இருந்த மும்தாஜ், பிக் பாஸ் கொடுக்கும் சில டாஷ்க்குகளை செய்ய மறுப்பதை தவிர வேறு எந்த புகாரும் அவர் மீது எழுந்ததில்லை. 

 

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய மும்தாஜ், எந்த ஊடகங்களுக்கும் பேட்டி கொடுக்காமல் இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக பிக் பாஸ் போட்டி குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், அவர் மஹத் குறித்து கூறிய சில விஷயங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

மும்தாஜ் கூறுகையில், “அந்த வீட்டில் எனக்கும் மஹத்திற்கும் இரண்டு வாரம் கழித்து தான் சண்டை ஆரம்பித்தது. அதுவரை நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம், ஏன் சண்டை வந்த போது கூட, ஒரு நாள் இரவு எனக்கு மிகவும் உடல்நலம் முடியாமல் போனது.

 

அப்போது மஹத் ஓடி வந்து, என் காலை பிடித்துக்கொண்டு மும்தாஜ் என்ன ஆச்சு நாங்க இருக்கின்றோம் என அத்தனை அன்பாக பேசினார்.

 

அந்த அன்பு எங்கிருந்து வருகின்றது, அவரிடம் தான் உள்ளது, ஆனால், அதையெல்லாம் காட்டவே இல்லை.” என்று தெரிவித்திருக்கிறார்.

Related News

3530

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery