’சக்தி’ என்ற ஹீரோயின் சப்ஜக்ட் படத்தில் நடித்து வரும் வரலட்சுமி, விஜயின் ‘சர்கார்’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’ ஆகியப் படங்களில் முக்கியமான வேடங்களில் நடிப்பதோடு, ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமான ‘தி அயர்ன் லேடி’ படத்திலும் மிக முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.
இந்த நிலையில், வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் வரலட்சுமி சண்டைப்போட்டிருக்கிறார். அதுவும் நடிகர் விஜய்க்காக தான் அந்த சண்டையையே அவர் போட்டாராம்.
‘சர்கார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய வரலட்சுமி, ”நான் விஜயின் வெறியை என்று சொல்லும் அளவுக்கு ரசிகை. அவரது படம் வெளியானதும், முதல் நாள் திரையங்குகிற்கு சென்று பார்ப்பேன். அதேபோல், விஜய் பற்றி யாராவாது தவறாக பேசினாலும், அவர்களுடன் சண்டைப்போட்டு விடுவேன்.
அப்படிதான், லாஸ்வேகாஸியில் ஒரு வெளிநாட்டுக்காரர் விஜய் குறித்து தவறாக பேசிவிட்டார். உடனே அவருடன் சண்டைப்போட்டுவிட்டேன். இது விஜய் சாருக்கும் தெரியும்.” என்று தெரிவித்தார்.
படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், பேசும் போதும் தான் விஜயின் தீவிர ரசிகையாக இருந்ததோடு, கேரளாவில் நடைபெற்ற போக்கிரி 100 வது நாள் விழாவில் தான் அவரை நேரில் சந்தித்தேன், என்று மகிழ்ச்சியாக கூறினார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...