இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று, அனைத்து ஏரியாக்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ’பரியேறும் பெருமாள்’ படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் பா.ரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜை அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய கமல்ஹாசன், ”தனது நண்பர்கள் பலர் போன் செய்து ‘பரியேறும் பெருமாள்’ படம் பாருங்கள், என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி. படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்திடமும், இயக்குநர் மாரி செல்வராஜிடமும் இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள், உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.” என்றார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...