தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு தமிழகம் மட்டும் இன்றி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறர்கள். இவர்கள் விஜயின் படத்தை மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற ‘சர்கார்’ படத்தின் இசை வெளீயீட்டு விழாவும், அதில் நடிகர் விஜய் பேசியதும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே, விஜய் நடிக்க தொடங்கியதில் இருந்து அவரை இளையதளபதி என்று அழைத்து வந்தனர். கடந்த ஆண்டு வெளியான ‘மெர்சல்’ படத்தில் இருந்து அவரை ரசிகர்கள் தளபதி என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அரசியலில் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் தளபதி என்று அழைப்பதால், தற்போது விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதாலும், இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஒருவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதாவது, விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர்? என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த உதயநிதி, “ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா, திரையுலக தல அஜித் சார்!, சரி தான்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...