Latest News :

”சங்கத்திலிருந்து விஷமிகளை விரட்டுங்கள்” - ’ஒளடதம்’ தயாரிப்பாளர் ஆவேசம்!
Thursday October-04 2018

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நேதாஜி பிரபு நாயகனாக நடித்து ள்ள படம் `ஒளடதம்`. இப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி . இது மருத்துவ உலகின்  மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது.

 

இப்படத்தினை பிரபலப்படுத்தும் முயற்சியாக `ஒளடதம்`  பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர். அதற்கான அறிமுக விழாவாக பிரமாண்ட  பேனா வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடந்தது. இயக்குநர்கள் பாக்யராஜ் , பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்ட  பேனா வெளியிடப் பட்டது. திரையரங்குகளில் பேனா தரும் போது` தமிழா தமிழில் கையெழுத்திடு என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக்குழு.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசுகையில், “இங்கே வந்துள்ள பாக்யராஜ் சார் சிறுபடங்களை ஊக்கப்படுத்த இம்மாதிரி சிறுபடங்களின் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். இது நல்ல விஷயம். அதே போல  அவரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல விஷயம் தெரிந்தவர்களிடம் பேசும் போது அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அப்படிப் பெயர் சொல்லும் போது பெயரை உச்சரிக்கும் போது அன்பு  கூடுகிறது. நெருக்கமும்  வெளிப்படும்.  இன்று தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று முயற்சி தொடங்குகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழன்தான்  ஆள வேணடும் என்று பல கட்சிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இப்படிக் குரல் எழவில்லை.. காரணம் அதற்கான தேவை அங்கில்லை. இங்கு இருக்கிறது. வேற்று மொழி ஆதிக்கம் பருந்து போல தலைக்கு மேல் வட்டமடிக்கிறது. தமிழ் மொழியையோ கோழிக்குஞ்சுகளைப் போல காப்பாற்ற வேண்டியிருக்கிறது. இன்று தமிழை வளர்ப்பதை விட முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது காரணம் தமிழன் தமிழனாக இல்லை. எனவேதான் தமிழில் கையெழுத்து போடுங்கள்  என்று இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது. தமிழில் கையெழுத்து போ டுங்கள் என்று கேட்கிற இப்படிப்பட்ட நிலைக்கு வருத்தமாகவும் இருக்கிறது. 

 

இன்று மருந்தும் செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டன. இந்த  இரண்டும் கேடு தருபவை. மருந்தை

மையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் வெற்றி பெற வேண்டும்." என்றார்.

 

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும் போது, “தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து  போடுவேன். காசோலைகளிலும் கூடத் தமிழில் தான்  கையெழுத்து  போடுவேன். ஆனால் தமிழில் கையெழுத்து  போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா? சில நாடுகளில தெரிந்தும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும். இப்படம்வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.

 

படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு பேசும் போது, “நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013-ல் ஒரு மருந்து அதிலுள்ள மூலப்பொருள்கள் தவறானது என்று செய்திகள் வந்தன. அம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில என்ன நடந்தது? இது பற்றி யோசித்தேன் இக்கதை உருவாகியது.

 

நாம் சாப்பிடும்  உணவுப் பொருள்கள் பற்றி நம்மிடம உள்ள விழிப்புணர்வு, நாம் சாப்பிடும் மருந்துகள் பற்றி நம்மிடம் இல்லை. எவ்வளவோ தடை செய்யபபட்ட மருந்துகள் இங்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளன. இது பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை. நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட்கள் படமெடுத்துள்ளோம். 

 

இப்பத்தில் 5 ஃபைட், 2 பாடல்கள் உள்ளன. ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்தாக வேண்டும் இப்போது புதிதாகப்  படமெடுக்க வருபவர்கள் படத்தைக் கூட போராடி எடுத்து விடுகிறார்கள். ஆனால் வெளியிடுவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைகிறது. தயாரிப்பாளர் கில்டிலோ,  பிலிம் சேம்பரிலோ, தயாரிப்பாளர் சங்கத்திலோ  ஒரு தயாரிப்பாளர் என்று மெம்பராகி இருக்கிறார்கள். அதைக்காட்டி உங்கள் படம் வெளியிட நான் உதவுகிறேன் என்று வருகிறார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும். என்னைப் போன்ற புதிய தயாரவ்ிப்பாளர்கள இப்படிப்பட்ட போலிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இந்த விஷமிகளை சினிமாவிலிருந்து விரட்டினால் தான் சினிமா உருப்படும். ஒளடதம் தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட மூன்று லட்சம் பேனாக்களை திருச்சி கோயம்புத்தூர் மதுரை திருநெல்வேலி சென்னை செங்கல்பட்டு சேலம் திரையரங்குகளில் பேனாவை வழங்க உள்ளோம். இதுவும் ஒரு புதிய முயற்சி, முயற்சி செய்வதில் எங்களுக்கு ஒரு சந்தோஷம்.” என்றார்.

 

இவ்விழாவில் பட நாயகி சமீரா, நடிகர் விஷ்ணுபிரியன், பட வில்லன் வினாயகராஜ், கவிஞர் தமிழமுதவன், நடிகை பாலாம்பிகா, விநியோகஸ்தர் எம்.சி .சேகர், இணைத் தயாரிப்பாளர் அருண் ராமசாமி, பிஆர்ஓ யூனியன் செயலாளர் பெருதுளசி பழனிவேல் ஆகியோரும்  கலந்து கொண்டு பேசினர்.  

Related News

3539

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery