விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள காதல் படமான ‘96’ புதிய காதலர்கள் கொண்டாடும் காதல் காவியமாகியிருப்பதோடு, பலரது முதல் காதலையும் நினைவுப்படுத்தும் உணர்வுப்பூர்வப் படமாகவும் உருவெடுத்திருக்கிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் தங்களது காதலால் உருக வைத்துக் கொண்டிருக்கும் நயந்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன், காதல் ஜோடி, ‘96’ படத்தை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

விஜய் டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, இசையமைப்பாளர் தரன் உள்ளிட்ட தங்களது நண்பர்களோடு நயந்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி ‘96’ படத்தை சமீபத்தில் பார்த்தார்கள். ஒரு பக்கம் 96 படம் தமிழ் சினிமாவில் முக்கியமான காதல் படமாக இடம் பிடித்திருக்கையில், நயந்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி அந்த படத்தை பார்த்ததிருப்பது, மற்றொரு முக்கிய விஷயமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...