தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் விஜய் சேதுபதி, நயந்தாராவுடன் ஜோடி போட்ட பிறகு தற்போது ‘96’ படத்தில் திரிஷாவுன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இதற்கிடையே ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா;’ பட இயகுநர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக எமி ஜாக்சனை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், விஜய் சேதுபதியுடன் நடிக்க எமி ஜாக்சன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ‘வனமகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியுள்ள சாயிஷாவை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக்கியுள்ளனர்.
‘ஜுங்கா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி இண்டெர்நேஷ்னல் டானாக நடிக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பாரிஸ் நாட்டில் நடைபெற உள்ளது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...