கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பொதுமக்கள் பாராட்டுவதோடு, திரையுலக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட குடுமத்தினருடன் சேர்ந்து நேற்று ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்தார். மேலும், அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் படத்தை பார்த்தார்.
படம் முடிந்த பிறகு படத்தை தயாரித்த இயக்குநர் பா.ரஞ்சித்தையும், இயக்குநர் மாரி செல்வராஜியையும் வெகுவாக பாராட்டிய மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம். திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...