தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி என்றால் அது ‘பிக் பாஸ்’ தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, டிவி பார்க்கும் பழக்கம் இல்லாதவர்களையும் டிவி முன்பு உட்கார வைத்த நிகழ்ச்சியாகும்.
பிரபலங்கள் பலர் ஒரு வீட்டுக்குள், தொலைபேசி, டிவி உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் இன்றி 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். இடை இடையே போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, அதன் மூலம் வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்ட பிறகு இறுதியில் இருக்கும் மூன்று பேர்களுக்கு இடையில் போட்டி வைத்து அதில் ஒருவரை போட்டியாளராக பிக் பாஸ் தேர்வு செய்வார். அப்படி தேர்வாகும் வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் பரிசும் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, இதில் பங்கேற்றவர்கள் மக்களிடம் பெரிய அளவில் பிரபலம்டைந்து தற்போது பல திரைப்பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. இது முதல் சீசனைப் போல இல்லை, என்ற குறைபாடு இருந்தாலும் மக்கள் இந்த நிகழ்ச்சியையும் ரசித்தே பார்த்தார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவி நிகழ்ச்சி ஒன்றை களம் இறக்கியுள்ளது. சன் டிவியின் புதிய சேனலான சன் சன்லைப் தமிழில் ’சொப்பனசுந்தரி’ என்ற நிகழ்ச்சியை தொடங்கியுள்ளனர்.
சிறந்த மாடல் அழகியை தேர்ந்தெடுக்க இந்த போட்டி நடக்கப்போகிறது. இதில் 10 மாடல் அழகிகள் கலந்துகொள்கிறார்கள். பிரசன்னா இந்நிகழ்ச்சியை தொகுத்துவழங்குகிறார்.
பிக் பாஸ் போலவே, மாடல் அழகிகள் ஒரு பெரிய வீட்டில் தங்க, அவர்களுக்குள் பலவிதமான மோதல்கள் ஏற்படுவதோடு, ஒரு கட்டத்தில் கைகலப்பும் ஏற்பட்டு விடுகிறது. இப்படி பரபரப்பாக நகரும் இந்த சொப்பனசுந்தரி, ரசிகர்களிடம் ஒரு ரவுண்ட் வருவது உறுதி.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...