வித்யா பாலன் நடிப்பில் பெரும் வெற்றிப் பெற்ற இந்திப் படமான ‘துமாரி சூலு’-வின் தமிழ் ரீமேக்காக உருவாகும் படம் ‘காற்றின் மொழி’. ஜோதிகா நடிக்கும் இப்படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இதில் லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், விதார்த், இளங்கோ, குமரவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தனஞ்செயன் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி, ஒரே கட்டமாக முடிவடைந்தது. இதையடுத்து படம் ஜோதிகாவின் பிறந்தநாளான அக்டோபர் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்தார்.
இந்த நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதி தனுஷின் வட சென்னை படமுக், 18 ஆம் தேதி விஷாலின் சண்டக்கோழி 2 படமும் ரிலிஸாக உள்ளது. மேலும், ’அண்டாவ காணோம்’, ‘எழுமீன்’, ‘திருப்பதிசாமி குடும்பம்’ ஆகிய படங்களும் அக்டோபர் 18 ஆம் தேதி ரிலிஸாவதால், தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ‘காற்றின் மொழி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிக்கொண்டுள்ளார். எனவே, நவம்பர் மாதம் தீபாவளிக்குப் பிறகு ‘காற்றின் மொழி’ படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘மொழி’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் ராதா மோகன் - ஜோதிகா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் இப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ரிலிஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டிருப்பது ஜோதிகா ரசிகர்களை அப்செட்டாக்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...