Latest News :

”நான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது...!” - வைரலாகும் ரித்விகாவின் வீடியோ
Monday October-08 2018

நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சிக்காக தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இது, முதல் சீசனைப் போல சுவாரஸ்யமாக இல்லை, என்ற விமர்சனம் எழுந்தாலும் நிகழ்ச்சி வெற்றிக்கரமாக முடிந்தது.

 

பிக் பாஸின் இரண்டாவது சீசனில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் இறுதியாக ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகியோர் அனைத்து கட்டங்களையும் கடந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் இறுதிப் போட்டியில் இடம்பெற்ற போட்டியாளர்கள் நான்கு பேரும் பெண்கள் என்பது இது தான் முதல் முறை.

 

இந்த நான்கு பேர்களில் நடிகை ரித்விகா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரசிகர்களின் பெரும் ஆதரவு இருந்தததால், அவரை பிக் பாஸ் வெற்றியாளராக அறிவித்தனர். ரசிகர்களும் அதனை வரவேற்றனர்.

 

இப்படி பிக் பாஸ் சீசன் 2-வின் டைடிலை வென்ற ரித்விகா, ஒரு வாரமாக எங்கும் தலை காட்டாமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.

 

தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் ரித்விகா, “எல்லாருக்கும் வணக்கம். நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது, நிறைய பேர் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணிருக்கீங்க. நான் வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது. ரித்விகா பேன்ஸ், ரித்விகா ஆர்மி என நிறைய கணக்குகளை தொடங்கி எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கிறீர்கள். இந்த ஒரு வாரம் நான் நேரம் எடுத்துக் கொண்டேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. அதனால் தான் இந்த வீடியோவை தாமதமாக வெளியிடுகிறேன். 

 

விரைவில் சமூக வலைதளங்களில் உங்களை நேரலையில் கலந்துரையாடுகிறேன். அனைவருக்கும் நன்றி.” என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த வீடியோ, 

 

 

Related News

3553

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery