சென்னையின் பிரபல கல்விக்குழுமங்களில் ஒன்றான வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் ஐசரி கே.கணேஷின் உறவினராகியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
ஐசரி கே.கணேஷின் பிறந்தநாளான அக்டோபர் 7 ஆம் தேதியை ‘வேல்ஸ் குடும்ப விழா’ என்ற பெயரில் வேல்ஸ் கல்விக்குழுமம் கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்த விழாவில், வேல்ஸ் கல்விக்குழுமத்தில் 20 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பதோடு, ரூ.50 வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வேல்ஸ் குடும்ப விழா, ஐசரி கணேஷின் பிறந்தநாளான நேற்று (அக்.7) சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். தொழிலதிபர் சேவியர் பிரிட்டோ கெளரவ விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இவ்விழாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்தில் சிறப்பாக பணியாற்றி, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவின் ஒரு அங்கமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனறும் தலைவருமான ஐசரி கணேஷன், இதுநாள் வரை எனக்கு நல்ல நண்பராக இருந்தார். ஆனால், இன்று முதல் நாங்கள் உறவினர்களாகிவிட்டோம். அவருக்கும் எனக்குமான உறவு என்ன என்பதை அவர், அவரது தாயாரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளட்டம்.” என்று கூறியவுடன், ஐஸரி கணேஷின் தயார், அவரிடம் அண்ணன், என்று கூற, அதன்படி, ஐசரி கணேஷன், கமல்ஹாசனை அண்ணன், என்று அழைத்தார்.
உடனே கமல்ஹாசன், “ஆமாம், ஐசரி கணேஷுக்கு நான் அண்ணனாக தான் இருப்பேன், காரணம், அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, நான் அவரது தந்தையுடன் நடித்துக் கொண்டிருந்தேன்.” என்றார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “வெற்றியாளர்களின் தாயார் விழாவில் உடன் அமர்ந்து பிள்ளைகளை ரசிப்பதை பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரிசு கொடுப்பது, பொன்னாடை போர்த்துவது எங்கள் பாணியில்லை. அவருக்கு நான் அண்ணனாக மாறியது தான் இந்த பிறந்தநாள் பரிசாக அளிக்கிறேன். கணேஷின் தந்தையார் ஐசரி வேலன் அவர்கள் அரசியலில் பல பதவிகள் கிடைத்தும் கூட, கலையின் மீது இருந்த தீராத ஆர்வத்தால் வாழ்நாளின் கடைசி வரை நடித்தார். இங்கு பறவைகளை பற்றி பேசினார்கள். நான் மக்களுக்காக பறக்கிறேன், உடன் யார் வந்தாலும் சேர்ந்து பறப்பேன். நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு. என் கொடியும் நானும் பறப்பது மக்களுக்காக தான். டெல்லி சென்றபோது, என்னை யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்டார்கள், எங்கள் மரபணுவை மாற்ற முயற்சிக்காதவர்களுடன் தான் நான் கூட்டணி வைப்பேன். நான் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாமே என்றும் கூட எனக்கு தோன்றியது. எஞ்சிய நாட்களை இப்படி கழிக்கிறேர்களே என்கிறார்கள். எஞ்சிய நாட்கள் இனி மக்களுக்காக தான். 8 மாத குழந்தை தான், ஆனால் நாங்கள் குழந்தை இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இனி அரசியலை மாற்றப்போகும் கூட்டம் இளைஞர் கூட்டம். அவர்களுடன் நான் தொடர்ந்து உரையாடி வருகிறேன், இனியும் தொடர்வேன்.” என்றார்.
முன்னதாக பேசிய ஐசரி கே.கணேஷ், “வேல்ஸ் குடும்ப விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வளாகத்தில் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு நானும், என் மனைவியும் பேசிக்கொண்டிருந்த போது, கமல் சாரை அழைக்கலாம என நினைத்தோம். அவரை கேட்டபோது உடனடியாக வருகிறேன் என ஒப்புக் கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அக்டோபர் 7ஆம் தேதி ரெட் அலர்ட் இருக்கிறது, விழா எப்படி நடக்கும் என்று சிலர் கேட்டார்கள். மழை வந்தாலும் வேல்ஸ் குடும்ப விழா சீரும் சிறப்புமாக நடக்கும் என்று சொன்னோம். அதற்கு வழிவிட்ட வருப பகவானுக்கு நன்றி. கமல்ஹாசன் சாருக்கும் எனக்கும் ஒரு நல்ல உறவு நீடித்து வருகிறது. என் மீது அதிக அக்கறை கொண்டவர். என் தந்தை ஐசரி வேலன் குடும்ப விழாவுக்கு, சிங்கார வேலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சினிமாவையும் தாண்டி, நல்ல பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது. அடுத்த கட்டத்தை நோக்கியும் அது போய்க் கொண்டிருக்கிறது. தற்போது இரண்டு வண்ண பறவைகள் வேறு வேறு திசையில் பயணித்து வருகின்றன, அவை இணைந்து பயணித்தால் அது நிச்சயம் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக மாறும்.” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கெளர விருந்தினர் சேவியர் பிரிட்டோ, வேல்ஸ் பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜோதிமுருகன் ஆகியோரும் பேசினார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...