இந்திய அரசியலில் வெளிவராத சில உண்மைகளை தனது திரைப்படங்களின் மூலம் வெளிக்காட்டுவதோடு, தனது கருத்தின் மூலமாகவும் அவ்வபோது சர்ச்சையை ஏற்படுத்தும் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, இந்த முறை ஜாதி பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் ராம்கோபால் வர்மா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்ந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களை இயக்கியிருப்பவர், தற்போது ஜாதி பிரச்சினை பின்னணியில் அழுத்தமான காதல் கதைக் கொண்ட திரைப்படம் ஒன்றை தயாரித்திருக்கிறார்.
‘பைரவா கீதா’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் தனஞ்செயா என்ற அறிமுக நடிகர் ஹீரோவாகவும், ஈரா என்ற அறிமுக நடிகை ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கும் இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் பஸ்ட் லுக்கை பார்த்த பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர், தங்களின் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை வெளியிடுகிறார்கள்.
ஸ்ராஸ்ரீ எழுதிய பாடல்களுக்கு ரவிசங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர், டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தை அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...