Latest News :

நடிகை பிரியா பவானி சங்கரின் திடீர் ஸ்டேட்மெண்ட்!
Monday October-08 2018

டிவி சீரியல் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியதோடு அப்படத்தின் மூலம் சினிமா நடிகையாகவும் பிரபலமானார்.

 

‘மேயாத மான்’ படத்தை தொடர்ந்து கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தவர், தற்போது எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் ‘மான்ஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், தனது ரசிகர்களுக்கு திடீர் ஸ்டேட்மெண்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதாவது, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கருக்கு, என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதற்கிடையே, அவரது பெயரில் போலியான சமூக வலைதளப் பங்கள் பல உருவாகியுள்ளதால், அதன் மூலம் வரும் பதிவுகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம், என்று அவர் கூறியுள்ளார்.

 

மேலும், இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் விளக்கம் அளித்தவர், தனது ஒரிஜினல் சமூக வலைதள பக்கம் எது, என்பதையும் அந்த வீடியோவில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

 

நடிகர், நடிகைகள் பெயரில் போலியாக சமூக வலைதள பக்கங்கலை தொடங்குபவர்கள், அதில் பல தவறான கருத்துக்களையும், சர்ச்சையான விஷயங்கள் குறித்து பதிவிடுவதால், அது சம்மந்தப்பட்ட நடிகர்களை ரொம்பவே பாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related News

3559

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery