தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னெந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும் வட இந்தியாவில் பல ஆண்டுகளாகவே இந்த நிகழ்ச்சி கொடிகட்டி பறக்கிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 12 வது சீசனில் உள்ளது.
தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பரபரப்பை ஏற்படுத்திய பிக் பாஸ் 12, தினமும் சண்டை, சர்ச்சை என்று சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் சம்பளம் விபரம் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் சக போட்டியாளரான சோமி கானுடன் ஸ்ரீசாந்துக்கு பிரச்சனை ஏற்பட்டது. அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் பிக் பாஸில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். அவர் வீராப்பாக கூறிவிட்டு ஏன் கிளம்பவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் 12 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஸ்ரீசாந்துக்கு தான் அதிகம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. வாரத்திற்கு அவருக்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் சம்பளம் கொடுக்கிறார்கள். போட்டியாளர்களில் அவருக்கு தான் அதிக சம்பளம் என்பதற்கான ஆதாரங்களை டிவி சேனல் ஸ்ரீசாந்திடம் காண்பித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் கிளம்பினால் ரூ.50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். அதனால் தான் ஸ்ரீசாந்த் கோபப்பட்டு பேசியபோதும் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருக்க முடிவு செய்தாராம். ஸ்ரீசாந்துக்கு என்ன டாஸ்க் வேண்டுமானாலும் கொடுங்க, ஆனால் அவரை மொட்டை மட்டும் போடுமாறு கூறாதீர்கள் என அவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...