தமிழ் சினிமாவிம் இளம் இயக்குநரான அட்லீ, தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ என்று விஜய்க்கு இரண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தாலும், இவர் மீது விமர்சனங்கள் பல எழுந்துள்ளது.
அதாவது, பழைய தமிழ்ப் படங்களை தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு அட்லீ எடுக்கிறார். அவர் மற்றப் படங்களை காப்பியடிக்கிறார், என்று மறைமுகமாக கூறிவந்தவர்கள், தற்போது நேரடியாகவே அட்லீ மீது இத்தகைய குற்றச்சாட்டுகளிஅ முன் வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அட்லீ மீதான இந்த காப்பி விமர்சனம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. ‘மூன்று முகம்’ திரைப்படத்தின் ரீமேக் உரிமையை சமீபத்தில் வாங்கிய தயாரிப்பாளர் ஒருவர், மெர்சல் படம் அப்படியே மூன்று முகம் தான், என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருப்பதோடு, தனக்கு அட்லீ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், என்றும் முறையிட்டிருக்கிறார்.
ஆனால், இதை மறுத்திருக்கும் அட்லீ, இது முழுக்க முழுக்க என்னுடைய படைப்பு, நான் எந்த படத்தையும் பார்த்து காப்பியடிக்கவில்லை, அதற்கான அவசியமும் எனக்கு இல்லை, என்று கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து, சிறந்த கதையாசிரியர்களை வைத்து இந்த இரண்டு படத்தையும் ஒப்பிட்டு பார்க்க உள்ளார்களாம். அப்படி மெர்சல், மூன்று முகம் படத்தின் காப்பியாக இருந்தால், அட்லீ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால், அவர் படமே இயக்க முடியாதபடி அவருக்கு தடை விதிக்கப்படும், என்பது போல பேச்சு வார்த்தை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விஜய் படத்தை இயக்குவதற்காக கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ள அட்லீக்கு, இதுபோன்ற பிரச்சினைகள் தலைவலியாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...