இந்திய சினிமாவின் முக்கியமானவர்களில் ஒருவரான கவிஞர் வைரமுத்து மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தமிழகத்திலும் முக்கிய மனிதராக விளங்கும் வைரமுத்து, தனது பல பாடல்களின் மூலமாக மட்டும் இன்றி தனது பல தமிழ்ப் படைப்புகளினாலும் தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியிடம் நெருக்கமாக பழகி வந்த அவர், திமுக-வுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் பாடலாசிரியர் வைரமுத்து மீதும் ஒரு பாலியல் புகார் வந்துள்ளது.
ஒரு பெண் (பெயர் சொல்லவில்லை) வைரமுத்துவிடம் வேலைப்பார்த்த போது, அவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை எல்லாம் கொடுத்தாராம், அதை தற்போது தைரியமாக கூறியுள்ளார்.
இது உண்மையா என்பது தெரியவில்லை, ஆனால் இது குறித்து ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினால் கோலிவுட்டே தற்போது பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
On lyricist Vairamuthu pic.twitter.com/c6DwYWOO6C
— Sandhya Menon (@TheRestlessQuil) October 8, 2018
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...