நடிகர் மன்சூரலிகானின் 2 வது மனைவியின் வாரிசுகள், 3 வது மனைவியை தாக்கியதை தொடர்ந்து அவர் ரத்த காயங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகானின் 2 வது மனைவி பேபி என்கிற ஹமிதா. இவரது வாரிசுகளான மகள் லைலா அலிகான், மகன் மீரான் அலிகான் ஆகிய இருவரும், மன்சூரலிகானின் 3 வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த போது அங்கிருந்த மன்சூரலிகான் மற்றும் அவரது 2 வது மனைவி பேபி என்கிற ஹமீதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்ட ஹமீதா, தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூரலிகான், ஹமீதா, லைலா அலிகான் மற்றும் மீரான் அலிகான் ஆகியோர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
பின்னர் வஹிதா அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...