உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக, நடிகை நிலானி போலீஸில் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்திய போலீஸார், சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில், லலித்குமார் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
லலித்குமார் தற்கொலைக்கு நிலானி தான் காரணம், என்று கூறிய லலித்குமார் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரிடம் வலியுறுத்தி வந்த நிலையில், நிலானி லலித்குமார் குறித்து பல திடுக்கும் தகவல்களை கூறினார். இது லலித்குமார் குடும்பத்தாரிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், அவர்கள் நிலானி, லலித்குமார் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதோடு, மேலும் பல ஆதாரங்களையும் வெளியிடுவோம், என்று கூறினார்கள்.
இதற்கிடையே, நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த அவர், தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், இன்று நடிகை நிலானி அளித்திருக்கும் பேட்டியில், லலித்குமார் குடும்பத்தார் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து பேசியதோடு, லலித்குமாரை தான் ஏன்? கணவர் என்று கூறினேன், என்பதற்கான காரணத்தையும் மனம் திறந்து கூறியுள்ளார்.
இது குறித்து கூறிய நிலானி, “எனக்கு பலருடன் தொடர்பு இருப்பதாக செய்தி பரப்பினார்கள். தொழிலதிபர், தியேட்டர் அதிபருடன் தொடர்பு என்றார்கள்.. நான் சொகுசாக வாழ நினைத்திருந்தால் அப்படி செய்திருக்கலாம். அது உண்மையாக இருந்தால் இப்படி நான் பேசிக்கொண்டிருக்கமாட்டேன்.. கொடுக்கவேண்டிய இடத்தில் பணம் கொடுத்து போய்கிட்டே இருந்திருப்பேன்.
நடிகை என்றாலே இந்த சமூகத்தில் தவறாக நினைக்கிறார்கள், நான் இப்போது 30 வீடுகளுக்கும் மேல் வாடகைக்கு கேட்டு சென்றுவிட்டேன், கணவர் இல்லை தனியாக இருக்கிறேன் என கூறினால் வீடு தரமாட்டேன் என்கிறார்கள். அதனால் பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டது, அதை காந்தி உண்மையாக்கினார்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...