சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படம் எப்படி மக்களை உலுக்கியதோ அதுபோல, மக்கள் மனதில் அழுத்தமாக பதியும் ஒரு திரைப்படமாக ‘மனுசங்கடா’ படம் உருவாகியுள்ளது.
பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினையும், பல விருதுகளையும் வென்றிருக்கும் இப்படத்தை ஏ.கே.பிலிம்ஸ் தயாரிக்க, தேசிய விருது பெற்ற அம்ஷன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
மத்திய அரசால் கோவாவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில், கடந்த ஆண்டு திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புகழ் பெற்ற கெய்ரோ உலகத் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது.
ரஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை, ஷீலா, விது, ஆனந்த் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு பி.எஸ்.தரன் ஒளிப்பதிவு செய்ய, அரவிந்த் - சங்கர் இசையமைத்துள்ளனர். இன்குலாப் பாடல்கள் எழுத, தனசேகர் படத்தொகுப்பு செய்துள்ளார். தாரா, கண.நட்குணன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பல பரபரப்பான உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, தீண்டாமைக் கொடுகள் பற்றி பேசும் இப்படம் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியாகிறது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...