Latest News :

‘சண்டக்கோழி 2’ படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது - வரலட்சுமி
Wednesday October-10 2018

விஷால் தயாரித்து நடித்து வரும் ‘சண்டக்கோழி 2’ படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லியாக வரலட்சுமி நடித்திருக்கிறார். ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வரும் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தில் நடித்தது குறித்து கூறிய நடிகை வரலட்சுமி, “சண்டக்கோழி 2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி2  -வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியே வந்து நடித்துள்ளேன். நாங்கள் திண்டுக்கல், காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும். படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது.” என்றார்.

Related News

3570

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery