Latest News :

மீண்டும் காதல் கசமுசாவில் ஆர்வம் காட்டும் யுவன் சங்கர் ராஜா!
Wednesday October-10 2018

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசைக்காகவும், அவர் போட்ட பல காதல் மெட்டுக்களுக்காகவும் பல படங்கள் வெற்றிப் பெற்றிருக்கிறது. அப்படிப்பட்டவர் படம் தயாரித்தால் எப்படி இருக்கும், ஆம், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், ஒரே காதல் கசமுசாக் கொண்ட படமாக வெளியான ‘பியார் பிரேமா காதல்’ இளசுகளை வெகுவாக கவர்ந்து வெற்றி பெற்றது.

 

தான் தயாரித்த முதல் படமே, அதுவும் தனக்கு பிடித்த காதல் கதை கொண்ட படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, அப்படத்தை இயக்கிய இயக்குநர் இளனுக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் யுவன் சங்கர் ராஜார்.

 

இந்த நிலையில், தனது இரண்டாவது படமும், தனது முதல் படத்தைப் போலவே காதல் கசமுசாக்கள் கொண்ட படமாக இருந்தால், இளசுகளை எளிதில் கவரும், அப்படி கவர்ந்தால், படம் வெற்றிப் பெற்று லாபம் கொட்டோ கொட்டு என்று கொட்டும், என்று நினைத்த யுவன் சங்கர் ராஜா, தனது முதல் பட இயக்குநரான இளனுக்கு இரண்டாவது வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார்.

 

’பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் தான், யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் அடுத்தப் படத்தையும் இயக்குகிறார். இதற்கான அட்வான்ஸையும் அவர் யுவனிடம் இருந்து சமீபத்தில் பெற்றுள்ளார்.

 

Director Ilan and Yuvan

 

இந்த படமும், ‘பியார் பிரேமா காதல்’ போலவே, இளசுகளுக்கு பிடித்த, ஏராளமான காதல் கசமுசாக்கள் கொண்ட படமாக இருக்குமாம். இந்த படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கிறார்.

Related News

3571

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery