தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகைகள் யார்? என்று கேட்டால் சிலரது பெயர் டக்கென்று நினைவுக்கு வரும், அந்த சிலரில் முக்கியமானவராக இருக்க கூடியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சிறு சிறு வேடங்கள், சிறு சிறு படங்கள் என்று தன்னை படி படியாக முன்னேற்றிக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், கதாபாத்திரத்திற்கும், கதைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் நடிகையாக திகழ்கிறார்.
அதனால் தான், ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தவர், தொடர்ந்து பல படங்களில் அம்மாவாகவே நடித்து வந்தாலும், அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுப் பெற்று வருகிறது. தற்போது விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், மணிரத்னம், கெளதம் மேனன் என்ற பெரிய இயக்குநர்களிடன் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்குப் படம் ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஹீரோ, தற்போதைய தெலுங்கு சினிமாவின் ஹாட் இளம் ஹீரோவான விஜய் தேவரகொண்டா. கிராந்தி மாதவ் இப்படத்தை இயக்குகிறார்.
ஏற்கனவே, இந்தி படத்தில் நடித்துவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கு சினிமாவிலும் அடியெத்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...