Latest News :

பாடகியின் பாலியல் புகார் - மெளனத்தை கலைத்த வைரமுத்து
Wednesday October-10 2018

தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகராகி கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி தொடர்ந்து பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். இது குறித்து டிவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரீட்வீட் செய்த பதிவு ஒன்றை, பாடகி சின்மயியும் ரீட்வீட் செய்தார். இதில் இருந்து தொடங்கிய இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.

 

வைரமுத்து மீதான சின்மயின் பாலியல் புகாருக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் வைரமுத்துவின் ரசிகர்கள், சின்மயியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக வைரமுத்து மெளனமாக இருப்பதையும் சிலர் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பாலியல் புகார் விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து, முதல் முறையாக பேசியிருக்கிறார்.

 

இது தொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Related News

3573

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery