இந்திய சினிமாவின் முக்கிய பிரமுகரான கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்து வரும் பாலியல் புகார் தான் கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் நியூஸ். தினம் தினம், வெவ்வேறு குற்றச்சாட்டுக்களை வைரமுத்து மீது சுமத்தி வரும் சின்மயிக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், வைரமுத்துவின் மகனும், பிரபல பாடலாசிரியருமான கார்க்கி வைரமுத்து, சின்மயிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் ட்விட்டர் பதிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கார்க்கியின் இந்த ட்விட்டர் பதிவு பழையது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, சில வருடங்களுக்கு முன்பும் இதே போல் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்காக சில பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டார்.
அதற்கு மதன் கார்க்கி ”சின்மயி நீ சரியான பாதையில் செல்கிறாய், உனக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.
காக்கியின் இந்த பழைய பதிவை சில குறும்புக்கார ட்விட்டர் வாசிகள், தற்போது ஷேர் செய்து வருவதால், அது சின்மயிக்கு தற்போதைய விவகாரத்தில் ஆதரவு தெரிவிப்பது போல வைரலாகி வருகிறது.
இதோ அந்த பதிவு,
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...