வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘வட சென்னை’ பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படம் வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வெளியாகிறது.
இதற்கிடையே, ’வட சென்னை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் அமீர், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் வேல்முருகன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், “வடசென்னை படத்தை பார்த்தேன் ஒரு ரசிகனாக. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. தனுஷ் அவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. வெற்றிமாறன் ஒரு தரமான படத்தினை இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா தரமணி போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நாம் பார்த்திருக்கிறோம். இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைவருமே மிகவும் அருமையாக நடித்துள்ளனர்.
நான் ஏற்கனவே பலரிடம் தனுஷ் பற்றி கூறுவது, அவர் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் ரசிகர்கலை திருப்திப்படுத்தும் விதத்தில் நடித்துவிடுவார். ரசிகர்களை இரண்டரை மணி நேரம் உட்கார வைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. அதை ஒரு சில நடிகர்கள் மட்டுமே செய்வார்கள், அதில் ஒருவர் தான் தனுஷ் என்பது எனக்கு முன்பே தெரியும், அதை பலரிடமும் நான் கூறி வருகிறேன். ரசிகர்களை தனி ஆளாக அவர் எண்டர்டெயின் பண்ணுவார். அவரை நான் பல படங்களில் ரசித்திருக்கிறேன். ஏன், தனுஷின் ரசிகன் தான் நான். இந்த படத்திலும் தனுஷ் மிரட்டியிருக்கிறார். அன்பு என்ற மனிதனின் வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தனுஷிடம் ரசிகர்கள் எதை எதிர்ப்பார்ப்பார்களோ அவை அனைத்தும் படத்தில் இருக்கிறது.” என்றார்.
தனுஷ் பேசும் போது, “இந்த படத்தின் கதையை ‘பொல்லாதவன்’ படத்தின் போதே வெற்றிமாறன், என்னிடம் கூறினார். ஆனால், அப்போது இந்த படத்தை எடுக்கும் சூழல் இல்லாததால் நாங்கள் எடுக்கவில்லை. அதன் பிறகு இந்த படத்தை அவர் சிம்புவை வைத்து எடுக்கப் போவதாக கூறினார், நானும் சரி, என்றேன். ஆனால், பிறகு இந்த படம் என்னிடமே வந்தது. அப்போது தான் புரிந்தது, இந்த கதை எனக்கானது என்று, உடனே தாமதிக்காமல் படத்தை தொடங்கி விட்டோம்.
என் கதாபாத்திரம் குறித்து அமீர் சார் கூறினார். ஆனால், அவரது கதாபாத்திரமும் படத்தில் வெயிட்டாக இருக்கும். அவரது கதாபாத்திரத்தின் எப்பிசோட்டை மட்டுமே தனியாக ரிலீஸ் செய்யப் போகிறேன், என்று வெற்றிமாறன் கூறினார். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் பவர்புல்லாக இருக்கும். அவரது மட்டும் அல்ல, சமுத்திரக்கனி, கிஷோர், பவன் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களின் கதாபாத்திரமும் மக்களால் கொண்டாடப்படும்.” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் வெட் ஏதும் வேண்டாம் என்றால், ஏ சானிறிதழ் கிடைக்கும், அல்லது சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ கிடைக்கும், என்றார்கள். ஆனால், ஒரு பகுதி மக்களைப் பற்றி சொல்லும் போது சில விஷயங்களை அப்படியே சொன்னால் தான் மக்களை சென்றடையும், அதனால் இப்படத்தின் காட்சிகள் எதையும் நீக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, அதனால் ஏ சான்றிதழை பெற்றுக் கொண்டோம்.
முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும். அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார். அவரின் பேச்சு.. நடிப்பு ஜடை. அசத்தியுள்ளார். கலை இயக்குநர் ஜாக்கிங் ஜெயில் செட் மற்றும் வடசென்னை சட்டை மிகப் பிரமாதமாக செய்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய நன்றி. படத்தில் நடித்த ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி பவன், சமுத்திரகனி கிஷோர் அற்புதமாக நடித்துள்ளார்கள். மேலும் அமீர், சமுத்திரகனி ஒரு இயக்குநர்களாக எனக்கு சிறிது உறுதுணையாக இருந்தார்கள். படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.
நிகழ்ச்சியில் நடிகைகள் ஆண்டியா, ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் பேசினார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...