கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் பல நல்லப் படங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இன்று வெளியாகியிருக்கும் ‘ஆண் தேவதை’ படமும் நல்லப் படம் என்ற சான்றிதழைப் பெற்றிருக்கிறது.
படம் வெளியாவதற்கு முன்பாகவே, பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிட, படத்தை பார்த்த அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டினார்கள். விமர்சனங்கள் மூலமாகவும் தொடர்ந்து படத்தை பாராட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே, இதனையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு இப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிட்டு காட்டப்பட்டது. நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் பா.இரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ், மீரா கதிரவன் கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தார்கள்.
படம் பார்த்த பிறகு சத்யராஜ் கூறுகையில், “ரொம்பவே யதார்த்தமான படம். வாழ்க்கையில் என்ன நடக்குதோ, குறிப்பாக மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருக்கிற பிரச்சினையை சினிமாவுக்கான எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் நல்லபடியாகச் சொல்லியிருக்கிறார் தாமிரா. இந்தப் படம் நிச்சயமா ஒரு பாடமா அமையும். இந்த மாதிரி படங்கள் நிறைய வரவேண்டும்” என்றார்.

இயக்குநர் பா.இரஞ்சித் கூறும்போது, “இன்றைய மிடில் கிளாஸ் வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பைப் பற்றி, அதன் சிரமங்கள் பற்றி எளிமையாகச் சொல்லியிருக்கிறார் தாமிரா. குறிப்பாக இன்றைய குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய குட் டச், பேட் டச் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஒரு கதையை அதனுடைய எளிமைத்தன்மையிலேயே சொல்லி முடிச்சிருக்கார். அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்துள்ளார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்றார்.
இயக்குநர் அமீர் பேசும்போது, “தாமிராவை ஒரு எழுத்தாளராகத் தெரியும். ஒரு இயக்குநராகவும் இப்போது தன்னை நிரூபித்திருக்கிறார். இன்றைக்கு நகரத்தில் இருக்கும் கணவன் மனைவிக்கான படமாக இது இருக்கிறது.. அவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது” என்றார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...