திருமணத்திற்குப் பிறகு ஹீரோயின்களுக்கு மார்க்கெட் போய்விடும் என்பதாலேயே பல ஹீரோயின்கள், தங்களுக்கு பட வாய்ப்பு குறையும் நிலையில் தான் திருமணத்தைப் பற்றி யோசிப்பதோடு, பட வாய்ப்புகளே கிடைக்காமல் போகும் நிலையில் தான், திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.
சுமார் 35 வயதுக்கு பிறகு பல நடிகைகள் திருமணம் செய்துக் கொண்டாலும், சில நடிகைகள் 35 வயதுக்கு மேலாகியும், சிலர் 40 வயதை கடந்தும் கூட இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அந்த வகையில், 38 வயதாகியும் நடிகை மும்தாஜ் திருமணம் குறித்து யோசிக்காமல் இருந்த நிலையில், அவருக்கு தற்போது திருமண ஆசையோடு, தாயாக வேண்டும், என்ற ஆசையும் வந்திருக்கிறதாம்.
தமிழ் சினிமாவில் சுமார் 19 ஆண்டுகள் பயணித்துக் கொண்டிருக்கும் மும்தாஜுக்கு, தற்போது பட வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையே, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற மும்தாஜ், ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.
இந்த நிலையில், பிக் பாஸ் குறித்து பேட்டி கொடுத்து வரும் மும்தாஜ், சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது சக பிக் பாஸ் போட்டியாளர் விஜயலட்சுமியின் மகனை பார்த்த போது, தனக்கும் திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வந்ததாக, தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேட்டியில் கூறிய மும்தாஜ், “பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஜியின் மமனைப் பார்த்த உடன் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று என் வீட்டில் உள்ள குழந்தைகளைப் பார்க்க வேண்டும், என்று தோன்றியது.
விஜியின் குழந்தை நிலன் வீட்டிற்குள் நடந்து வந்ததை பார்த்த எனக்கு, திருமணம் செய்துக்கொண்டு குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருந்தது.” என்று தெரிவித்தார்.
அதே சமயம், எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள்? என்ற கேள்வி, மழுப்பலான பதில் அளித்த மும்தாஜ், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வந்த ஷாரிக் ஹாசன் மீது தாயைப் போல பாசம் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...