நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின், புதிய வீட்டில் இருந்து 2 பசு மாடுகள் திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்த், குடும்பத்தோடு வசித்து வருகிறர். இதற்கிடையே, சென்னை காட்டுப்பாக்கத்தில் புதிய வீடு ஒன்றையும் விஜயகாந்த் கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டில் பல செல்லப்பிராணிகளும், கால்நடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு பசு மாடுகள் திடீரென மாயமாகியுள்ளன. பசுமாடுகள் மாயமானது குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் வீட்டில் இருந்து பசு மாடுகள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...