Latest News :

சின்மயியை தொடர்ந்து பிரபல நடிகை வெளியிட்ட பாலியல் புகார்!
Friday October-12 2018

கடந்த சில நாட்களாக பாலியல் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் ஆரம்பித்த இத்தகைய விவகாரம், தற்போது பாடகி சின்மயி மூலம் தமிழ் சினிமாவில் கொழுந்துவிட்டு எரிகிறது.

 

வைரமுத்து மீது தொடர்ந்து பல்வேறு பாலியல் புகார்களை கூறி வரும் சின்மயி, மேலும் பலர் மீதும் பாலியல் புகார்கள் தெரிவித்ததோடு, வைரமுத்துவினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில், சின்மயியை தொடர்ந்து பிரபல நடிகை ஒருவர், டிவி நடிகர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சின்னத்திரை நடிகர் பிரஜனின் மனைவியும், திரைப்பட நடிகையுமான சாண்ட்ரா தன்னுடன் நடித்த பிரகாஷ்ராஜன் என்பவர் பாலியல் ரீதியாக தன்னை திட்டியதாக கூறியிருந்தார். இவர் ’தெய்வமகள்’ சீரியலில் காயத்ரியின் கணவராக நடித்து பிரபலமானார்.

 

Sandra

 

அதே சமயம், சாண்ட்ராவின் பாலியல் புகாரை மறுத்திருக்கும் பிரகாஷ்ராஜ், ”தான் எந்த தவறும் செய்யவில்லை, தன்னுடன் பணிபுரிந்த மற்ற பெண்களுக்கும், என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கும் இது கண்டிப்பாக தெரியும்.” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

 

மேலும், இது குறித்த தனது விளக்கம் ஒன்றையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த விளக்கம்,

 

 

Related News

3583

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...