தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் சில படங்களில் சில நிமிடங்கள் தலை காட்டியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், விஜயின் மகன் சஞ்சயின் பெயரில் சமூக வலைதளத்தில் பெரிய மோசடி நடந்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராமில் விஜயின் மகன் சஞ்சய் பெயரில் ஒரு அக்கவுண்ட் இருந்தது. அதில், தனக்கு பிடித்த நடிகர் விஜய், அஜித் மற்றும் விஜய் சேதுபதி என்று கூறப்பட்டதோடு, அஜித்தின் பிரியாணி ரொம்ப பிடிக்கும், தல என்றாலே கெத்து தான், என்று அந்த அக்கவுண்டில் சஞ்சய் கூறியதாக பதிவிடப்பட்டிருந்தது.
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை தொடர்ந்து, இது பல இண்டர்நெட் ஊடகங்களில் செய்தியாகவும் வெளியாகிறது.
இதற்கிடையே, அந்த சஞ்சய் அக்கவுண்ட் போலியானது என தெரிய வந்துள்ளது. விஜய்யின் மகன் சஞ்சய் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் இல்லையாம்.
.To All d Ppl Concerned With Regard To Messages & Chat Sessions On Instagram,With #Thalapathy #Vijay's Son Sanjay, This Is2Clarify Tht Both d Children-Jason Sanjay & Divya Sasha r Not On Any Social Media. There4,It's A Kind Request2 #Thalapathy Fans2 Not Support Fake IDs. pic.twitter.com/MtTvHwke8h
&mdas h; RIAZ K AHMED (@RIAZtheboss) October 12, 2018
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...