Latest News :

பிக் பாஸ் நிகழ்ச்சியால் கசிந்த ரகசியம்! - முன்னணி நடிகையின் பரபரப்பு புகார்
Saturday October-13 2018

இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழில் இரண்டாம் சீசனை வெற்றிக்கரமாக சமீபத்தில் முடித்தது. இதற்கிடையே, இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி 12 சீசனை தொடங்கி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

 

சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீநாத் பங்கேற்றுள்ளார். போட்டியின் தொடக்க நாள் முதலே சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீசாந்த், நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்ல முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

 

இதற்கிடையே, அவர் அண்மையில் தன் மனைவி புவனேஷ்வரியுடன் 7 வருடங்கள் காதலில் இருந்ததை பற்றி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறினார்.

 

அவரது இத்தகைய பேச்சை கண்டு தற்போது பொங்கியுள்ள பிரபல நடிகை நிகிஷா படேல், புவனேஷ்வரியுடனான திருமணத்திற்கு முன்பு என்னுடன் ஒரு வருடம் லிவ் இன் டூகெதர் வாழ்க்கையில் ஸ்ரீசாந்த் இருந்தார் என்ற ரகசியத்தை சொல்லியிருக்கிறார்.

 

மேலும், ”2012 ஆம் ஆண்டு ஸ்ரீசாந்தை விட்டு பிரிந்தேன், தற்போது 5 வருடங்கள் அமைதியாக இருந்தேன். ஆனால், அப்பிரிவில் இருந்து என்னால் முழுமையாக விடுபட முடியவில்லை. பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை ஒரு மகான் போல ஸ்ரீசாந்த் காட்டிக்கொள்கிறார். ஆனால், அவரின் மறுபக்கம் எனக்கு மட்டும் தான் தெரியும். அவர் பெண்கள் மீது எப்போதும் மரியாதை வைக்க மாட்டார்.” என்றும் நிகிஷா படேல் கூறியிருக்கிறார்.

 

Nikisha Patel and Shreeshanth

 

ஸ்ரீசாந்த் - நிகிஷா படேல் குறித்த இந்த ரகசியம் பல ஆண்டுகளாக வெளியே தெரியாமல் இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளியே கசிந்துள்ளது.

Related News

3586

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery