Latest News :

எனக்கும் கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன - தனுஷ் நாயகி கிளப்பும் பரபரப்பு
Saturday October-13 2018

நடிகைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து தற்போது பலர் பேச தொடங்கியுள்ளார்கள். பல நடிகைகள் இது குறித்து வெளிப்படையாகப் பேசினாலும், தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோம், என்பதை மட்டும் கூறுவதில்லை.

 

இதற்கிடையே, பாடகி சின்மயி வைரமுத்து மீது கூறிய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை தொடர்ந்து சில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பேசி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், தனுஷின் ‘அனேகன்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுமகான அமைரா தஸ்தூர், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்ஹ்டு பேசியிருக்கிறார்.

 

இது குறித்து கூறிய அமைகா தஸ்தூர், “எனக்கும் பாலிவுட், தென்னிந்தியத் திரையுலகில் பாலியல் சீண்டல்களுக்கும், அதைத் தொடர்ந்து மன உளைச்சல்களுக்கும் ஆளாகியிருக்கிறேன்.

 

என்னுடன் நடித்த நடிகர், என்னைத் தவறான முறையில் இறுக்கினார். அதை உணர்ந்த நான் இயக்குநரிடம் புகார் செய்தபோது, அதை அவர் கண்டுகொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார். வேண்டுமென்றே படக்காட்சியைத் தாமதமாகப் பதிவுசெய்தனர்.

 

சில இடங்களில், அந்த நடிகரை உதாசீனப்படுத்தியதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் அந்த நடிகரிடம் என்னை மன்னிப்பும் கேட்கச் சொன்னார்.  என்னிடம் தவறாக நடந்தவர்கள் யாரென்று நான் இப்போது கூற மாட்டேன். அவர்கள், இந்தத் துறையில் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள் என்றும், யாரென்றும் அவர்களுக்கே தெரியும். ஒரு நாள், அவர்கள் யாரென்று பெயரை சொல்வேன்.”  என்று தெரிவித்துள்ளார்.

Related News

3587

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...