Latest News :

சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’!
Saturday October-13 2018

பெண் இயக்குநர் மணிமேகலை இயக்கியிருக்கும் ‘பெண்டாஸ்டிக் பிரைடே' ( Fantastic Friday) என்ற தமிழ் குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.

 

'பென்டாஸ்டிக் பிரைடே என்ற தமிழ் குறும்படம்  சமீபத்தில் அமிர்தசரஸ், பஞ்சாபில் நடந்த குளோபல் சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, சிறப்புப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது. இந்தப்படத்தின் இயக்குனர் மணிமேகலை தமிழ்நாட்டைச் சார்ந்தவர். இந்தத் திரைப்படவிழாவில் பஞ்சாப் திரைத்துரையினரும், தேசிய விருதுபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

இயக்குனர் மணிமேகலையின் கதைத்தேர்வு, மற்றும் அவர் அதைக் கையாண்டு இயக்கியவிதத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நம் சமுதாயத்தில் மூடநம்பிக்கைகள் எப்படி ஆழமாக வேரூன்றி இருக்கின்றன மற்றும் அவை எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் குறுக்கிட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பவற்றை மெல்லியதாக விளக்குவதாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் நம் எண்ணங்களே நம் செயல்களாக மாறுகின்றன என்ற கருத்தினை ஆழமாக முன் வைக்கிறார்.

 

Manimegalai

 

மானிடவியல் பயின்ற மணிமேகலை, நியூயார்க் பிலிம் அகடாமியில் இயக்குநர் பயிற்சி பெற்றவர் ஆவார். தற்போது முழுநீளத்திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதுவதில் ஈடுபட்டிருக்கிறார்.

Related News

3588

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery