பிரபல பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறி வரும் பாலியல் புகார் தான், தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்மயின் புகாரை வைரமுத்து மறுத்தாலும், அவர் தொடர்ந்து வைரமுத்து மீது புகார் கூறுவதோடு, அவரால் பல பாடகிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைரமுத்து மீது வழக்கு தொடர்வது தொடர்பாக தனது வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சின்மயி விவகாரம் தொடர்பாக இரண்டாவது முறையாக விளக்கம் அளித்திருக்கும் வைரமுத்து, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன். பாலியல் புகார் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி, அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன். நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை யாரும் இப்போது முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலைவணங்குகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆக, மொத்தத்தில், வைரமுத்து - சின்மயி விவகாரம் விரைவில் நீதிமன்றத்திற்கு செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...