தமிழ் சினிமாவில் திடீர் திடீரென்று பல ஸ்டார்கள் வந்தாலும், அவர்களில் சிலர் மட்டுமே மக்களின் கவனத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த வகையில், குறுகிய காலத்தில் “யார் அந்த பப்ளிக் ஸ்டார்? என்று தமிழ் சினிமாவிலும், மக்களிடத்திலும் பெரும் கேள்வியை எழுப்பியவர் துரை சுதாகர்.
‘தப்பாட்டம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், மேலும் சில படங்களில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். அப்படங்கள் ரிலிஸுக்கு தயாராக உள்ள நிலையில், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன், என்று அடம் பிடிக்காமல், நல்ல வேடமாக இருந்தால், சின்ன வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடி, என்று அறிவித்தார். அதன்படி, தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறார்.
ஆம், பொதுவாக நாட்டில் நடக்கும் முக்கியமான விஷயங்களை நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் கலாய்ப்பார்கள். அதற்கு அவர்கள், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் திரைப்பட புகைப்படங்கள் அல்லது வடிவேலுவின் நகைச்சுவை காட்சியின் புகைப்படங்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சமீபத்திய முக்கிய விவகாரம் ஒன்றுக்கு பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் ‘தப்பாட்டம்’ படத்தின் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்த மீம்ஸ் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது, ”வங்கி கணக்கு தொடங்க ஆதார் தேவையில்லை, பான் கார்டு போதும், ஆனால் பன் கார்டு வாங்க ஆதார் கட்டாயம்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை, பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் ‘தப்பாட்டம்’ படத்தின் புகைப்படம் ஒன்றை பயன்படுத்தி மீம்ஸ் வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இந்த மீம்ஸ் வெளியாக இரண்டு வாரங்கள் ஆனாலும், தற்போது வரை பல சமூக வலைதளங்களில் இந்த மீம்ஸ் வைரலாகி வருகிறது.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் மீம்ஸ்களைக் காட்டிலும், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் மீம்ஸ் தான் தற்போது டிரெண்டிங்காக உள்ளதாம்.
இதே அந்த மீம்ஸ்,


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...