Latest News :

பிரபலங்கள் பாராட்டிய ‘வேறென்ன வேண்டும்’ பாடல்கள்!
Sunday October-14 2018

ஏ.எம்.ரெட் கார்பேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் அருண்மணி, ஷல்ல திம்ம ரெட்டி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேறென்ன வேண்டும்’.

 

சிவபாரதி குமாரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நரேன் ராம் தேஜ் ஹீரோவாக நடிக்க, பிரேர்னா கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். தர்ஷன் சாந்த் வில்லனாக நடிக்க, அனுபமா, சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆதித்யா, கதிர், அஜய், அருண் மிஜோ, ராஜகணபதி, சீமா தன்வீர், நந்தா கிஷோர், சாய் லக்‌ஷ்மி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

 

கேமில் ஜெ.அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரேம்குமார் சிவபெருமான் இசையமைக்க, பவன் மித்திரா, ஏ.கே.சாந்தகுமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

இடி மின்னல் இளங்கோ ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, பாபா பாஸ்கர், ராதிகா, சந்தோஷ்,  தஸ்தா ஆகியோர் நடனம் அமைத்திருக்கிறார்கள். சங்கர்.கே படத்தொகுப்பு செய்ய, நிகில் பி.ஆர்.ஓ பணியை கவனிக்கிறார்.

 

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, இசையமைப்பாளர் ராஹானா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

 

முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. பாடல்களை பார்த்த இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ் மற்றும் பேரரசு படத்தின் இசையமைப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டியதோடு, பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதாக கூறியதோடு, படமும் நிச்சயம் வெற்றி பெறும், என்று வாழ்த்தினார்கள்.

Related News

3597

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

Recent Gallery