Latest News :

கலைவாணர் அரங்கை அதிர வைத்த ‘பில்லா பாண்டி’!
Sunday October-14 2018

தமிழ் சினிமாவில் வெற்றி தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வந்த ஆர்.கே.சுரேஷ், பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் தொடர்ந்து ‘மருது’, ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக அதிரடி காட்டியவர், ‘பில்லா பாண்டி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

 

ஜே.கே.பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிக்கும் இப்படத்தில், ‘மேயாத மான்’ புகழ் இந்துஜா, சாந்தினி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்க, சிறப்பு தோற்றம் ஒன்றில் விதார்த் நடித்திருக்கிறார். சூரி கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.சி.பிரபாத், தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், செளந்தர், மாஸ்டர் கே.சி.பி.தர்மேஷ், மாஸ்டர் கே.சி.பி.மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எம்.எம்.எஸ்.மூர்த்தி எழுத, ராஜ் சேதுபதி இயக்கியிருக்கிறார். ஜீவன் ஒளிப்பதிவு செய்ய, இளையவன் இசையமைத்திருக்கிறார். ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்ய, மேட்டூர் செளந்தர் கலையை நிர்மாணித்துள்ளார். கல்யாண், விஜி, சாண்டி ஆகியோர் நடனம் அமைக்க, சக்தி சரவணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கவிக்குமார், தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தை தம்பி பூபதி கவனிக்க, மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் ஷாம், கருணாஸ், விவேக், உதயா, சூரி, இயக்குநர்க்ள் சீனு ராமசாமி, சீமான், ஆர்.வி.உதயகுமார், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டார்கள். மேலும், அஜித் ரசிகர்களும், ஆர்.கே.சுரேஷின் ரசிகர்கள் ஏராளமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

 

கலைவாணர் அரங்கம் அமைந்திருக்கும் பகுதி முழுவதுமே கட்-அவுட், பேனர்கள் என்று அரசியல் பொதுக்கூட்டம் போல, ‘பில்லா பாண்டி’ இசை நிகழ்ச்சியை நடத்திய ஆர்.கே.சுரேஷ், கலைவாணர் அரங்கத்தையே அதிர செய்துவிட்டார்.

Related News

3598

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

Recent Gallery