Latest News :

செப்டம்பர் மாதாம் கவுதம் மேனனை களம் இறக்குகிறார் விஜய் மில்டன்!
Monday August-28 2017

பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன், இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கோலி சோடா’ மாபெறும் வெற்றி பெற்றதை. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கோலி சோடா 2’ என்ற தலைப்பில் விஜய் மில்டன் இயக்கி வருகிறார்.

 

விஜய் மில்டனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் தயாரிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக, ‘கடுகு’ படத்தில் கதாநாயகியாக நடித்த சுபிக்‌ஷா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த தகவலை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.

 

இந்த நிலையில், ‘கோலி சோடா 2’ படத்தின் டீசர் ஒன்றை விரைவில் வெளியிட உள்ள விஜய் மில்டன், அந்த டீசரின் ஆரம்பத்தில் இயக்குநர் கவுதம் மேனனை பேச வைத்துள்ளார். அவரது குரல் டீசருக்கு மேலும் வலுவூட்டும் வகையில் அமைந்திருப்பதாக சமீபத்தில் விஜய் மில்டன் தெரிவித்திருந்தார்.

 

தற்போது டீசர் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி டீசரை வெளியிட விஜய் மில்டன் முடிவு செய்துள்ளார். கவுதம் மேனனின் குரல் பலத்தோடு உருவாகியுள்ள ’கோலி சோடா 2’ படத்தின் டீசர் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News

360

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery