பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறும் பாலியல் புகாருக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருவதோடு, சின்மயி கூறுவதில் உண்மை இருக்கிறது, என்றும் கூறி வருகிறார்கள்.
சின்மயி பாலியல் புகார் தெரிவித்த போது அவருக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர் நடிகை சமந்தா. அவரை தொடர்ந்து சித்தார்த், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, சின்மயி நடந்த சம்பவத்தை விவரமாக தெரிவித்துள்ளார். அவர் சொல்வதில் உண்மை உள்ளது, என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்து வரும் வரலட்சுமி, பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக பேச வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தான் 5 பேரால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், என்று வரலட்சுமி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வரலட்சுமி நடத்தி வரும் ‘உன்னை அறிந்தால்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தான் சிறுமியாக இருந்த போது கிட்டதட்ட 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர், இதை தெரிவிக்க தான் வெட்கப்படவில்லை, என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே பிரபல தொலைக்காட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார், என்று வரலட்சுமி புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...