விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ தீபாவளியன்று வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், ‘மெர்சல்’ படத்தில் அரசியல் வசனங்கள் கொஞ்சமாக இருந்தது, ஆனால், சர்காரில் அரசியலை வைத்து முருகதாஸ் மெர்சல் காட்டியிருக்கிறார், என்று விஜய் கூறியதில் இருந்து படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி அரசியல்வாதிகளும் ‘சர்கார்’ படத்திற்காக காத்திருக்கும் நிலையில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெற்றிப் பெற்ற படத்திற்கு நிகராக ‘சர்கார்’ படத்தின் வியாபாரம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பாகுபலி’ என்ற படம் இந்திய சினிமாவில் எந்த அளவுக்கு அதிர்வை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தமிழகத்தில் கூட மிகப்பெரிய தாக்கத்தை அப்படம் ஏற்படுத்தியதோடு, மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. இந்த படத்திற்கு இணையாக சர்கார் படத்தின் வியாபாரம் இருப்பதாக, சென்னை ரோகினி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், ”பாகுபலி படத்திற்கு இணையாக சர்கார் வியாபாரம் இருக்கிறது. விஜய் படத்தை இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் இருக்காது.” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...